தினத்தந்தி
1. மரியாதை என்பது கேட்டுப் பெறுவது அல்ல. சிலரின் பண்புகளே அவர்களுக்கு இயல்பாக மரியாதையை பெற்றுத் தருகின்றன.
2. சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களை அனைவரும் மதிப்பார்கள். நேர்மை மற்றும் நம்பகத்தன்மை மரியாதையை உயர்த்தும்.
3. நேரத்திற்கு வருவது, ஒப்படைத்த வேலையை முடிப்பது, ரகசியங்களை காப்பது போன்றவை நம்பிக்கையை வளர்க்கும்.
4. அதிகம் பேசுவதை விட, மற்றவர்களின் கருத்துகளை கவனமாகக் கேட்பது சிறந்த பண்பாகும்.
5. உரையாடலில் மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிப்பது பரஸ்பர மரியாதையை உருவாக்கும்.
6. அனைவரிடமும் இரக்கத்துடனும், பணிவுடனும் நடந்து கொள்பவர்களை மக்கள் அதிகம் விரும்புவார்கள்.
7. சிறிய உதவிகளுக்குக் கூட நன்றி கூறும் பழக்கம், மனிதர்களிடையே நல்ல மதிப்பை ஏற்படுத்தும்.
8. சிக்கலான சூழ்நிலைகளிலும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது சிறந்த தலைமைத்துவ பண்பாகும்; இது மற்றவர்களின் மரியாதையை பெற உதவும்.