ஆட்டு போட்டி கிரேவி-சூப்பரான சுவை!

தினத்தந்தி

ஆடு போட்டி கிரெவி என்பது நாட்டு ஸ்டைலில் செய்யப்படும் ருசியான மற்றும் சத்தான உணவு. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் பொருத்தமான ஒரு ஸ்பெஷல் ரெசிபி.

தேவையான பொருட்கள்: ஆடு போட்டி - 1, சின்ன வெங்காயம் - 100 கிராம், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 4, பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு, சோம்பு - தேவையான அளவு, மிளகு, சீரகம் - 2 ஸ்பூன், தேங்காய் துருவல் - சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை:முதலில் ஆடு போட்டியை நன்றாக 2–3 முறை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து லவங்கம், கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை வதக்கவும்.

அதன் பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தேங்காய் சேர்த்து கிளறி இறக்கி ஆறவிட்டு விழுதாக அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். அதன் பின் ஆடு போட்டி சேர்த்து 5–10 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.

பின்னர் அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து, குக்கரில் 7–8 விசில் வரும்வரை வேகவிடவும்.

இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடான சுவையான ஆடு போட்டி கிரெவி தயார்

ஆடு போட்டி கிரெவி – சூப்பரான சுவை!