தங்கம், எலுமிச்சை விலை கிடு கிடு உயர்வு..கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ பெங்களூருவில் நடந்த போட்டியில் சென்னை அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களை அவமதிக்கும் வகையில் DJ பாடல் ஒளிபரப்பியதாக பிசிசிஐ-யிடம் சிஎஸ்கே நிர்வாகம் புகார்.

✦ மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தாக்கல்; தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

✦ கடந்த ஆண்டு போதுமான மழை இல்லாததால் விளைச்சல் குறைவு. ஒரு கிலோ எலுமிச்சை தற்போது ரூ.170 ஆக உயர்வு.

✦ தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.14,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

✦ தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

✦ சென்னை தி.நகரில் அனுமதியின்றி சாலை வலம் சென்றதாகக் கூறி தவெக தலைவர் விஜய் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

✦ விராட் கோலி அசத்தல் பேட்டிங்... லக்னோ அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

✦ காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் கலீல் அகமது.

✦ தொகுதி மறுவரையறை பாதிக்காது என தெளிவாகக் கூறியும் ஸ்டாலின் DOUBLE GAME ஆடுகிறார்; பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை தடுக்க முயற்சிக்கிறார் - எடப்பாடி பழனிசாமி

பேக்கரி ஸ்டைல் முட்டை பப்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி?