பேக்கரி ஸ்டைல் முட்டை பப்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி?

தினத்தந்தி

தேவையான பொருட்கள்: பப் பேஸ்ட்ரி ஷீட்கள், வேகவைத்த முட்டைகள், பெரிய வெங்காயம் - 2, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, தக்காளி - 1, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா - தலா 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள், உப்பு, கருவேப்பிலை, மல்லித்தழை, எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தக்காளியைச் சேர்த்து நன்றாக நசுங்கும் வரை சமைக்கவும்.

அதன்பின் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். மசாலா நன்கு சுருண்டு வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.

உறைந்த பப் பேஸ்ட்ரி ஷீட்களை அறை வெப்பநிலைக்கு கொண்டு வரவும். ஒரு ஷீட்டை எடுத்து அதன் நடுவில் மசாலாவை வைத்து, அதன் மேல் பாதியாக வெட்டிய முட்டையை வைக்கவும்.

ஷீட்டின் நான்கு மூலைகளையும் நடுவில் சேர்த்து மெதுவாக ஒட்டவும்.

ஏர் பிரையரை 180°C வெப்பநிலையில் 5 நிமிடங்கள் முன்கூட்டியே சூடுபடுத்தி, பப்ஸ்களை வைத்து 10–15 நிமிடங்கள் வரை வேகவிடவும்.

மேல் பகுதி பொன்னிறமாக மொறுமொறுப்பாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.

சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

சாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்!