தினத்தந்தி
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் கீழ்கண்டவற்றை பின்பற்ற தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இந்நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும்.
உயிரிழந்த பறவைகள் மற்றும் கால்நடைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது.
உயிரிழந்த பறவைகள் மற்றும் கால்நடைகளை எரிக்க வேண்டும் அல்லது ஆழமாக குழி தோண்டி புதைக்க வேண்டும்.
சமையலறை மற்றும் பண்ணைக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்ய வேண்டும்.
கைகை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.