குடல் ஆரோக்கியம்: உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் ரகசியம்!

தினத்தந்தி

குடல் ஆரோக்கியம் (Gut Health) என்பது நமது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் அடிப்படையான ஒன்றாகும்.

நமது செரிமான மண்டலத்தில் வாழும் கோடிக்கணக்கான நல்ல பாக்டீரியாக்களே உணவைச் செரித்து ஊட்டச்சத்துக்களை உடலுக்குத் தருகின்றன.

வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் மற்றும் அதிக உடல் சோர்வு போன்றவை குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதன் முக்கிய அறிகுறிகளாகும்.

தினமும் தயிர், மோர் மற்றும் பழைய சாதம் போன்ற ப்ரோபயோடிக் (Probiotic) உணவுகளைச் சாப்பிடுவது குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும்.

வெங்காயம், பூண்டு, வாழைப்பழம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் நல்ல பாக்டீரியாக்களுக்குத் தேவையான உணவை (Prebiotics) வழங்குகின்றன.

அதிகப்படியான சர்க்கரை, மைதா மற்றும் பதப்படுத்தப்பட்ட ஜங்க் ஃபுட்களைத் தவிர்ப்பது கெட்ட பாக்டீரியாக்கள் பெருகுவதைத் தடுக்கும்.

உணவை அவசரப்படாமல் நன்றாக மென்று சாப்பிடுவதும், தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதும் செரிமானத்தை எளிதாக்கும்

சீரான தூக்கம் மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது நமது குடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

பாலிலிருந்து தயாரிக்கப்படும் சுவையான உணவுப் பொருட்கள்!