உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் தவறான தேநீர் பழக்கங்கள்!

தினத்தந்தி

அதிக சூடாக தேநீர் குடித்தல்; அதிக சூட்டுடன் தேநீர் குடிப்பது காலப்போக்கில் உணவுக்குழாயை சேதப்படுத்தக்கூடும். 65 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் சூடாக இருக்கும் எந்த பானத்தையும் உடனே பருகக்கூடாது என்று உண வியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

credit: freepik

சில நிமிடங்கள் ஆறவைத்துவிட்டு உதட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சூட்டில் குடிப்பது நல்லது. அது டீயின் சுவையை உணர வைக்கும், உடல் நலத்தையும் காக்கும்.

credit: freepik

வெறும் வயிற்றில் தேநீர் குடித்தல்: வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது அசிடிட்டி, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம். தேநீரில் உள்ள டேனின் அமில உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். அதனால் காலையில் சிறிது உணவு உட்கொண்ட பிறகு தேநீர் குடிப்பது நல்லது.

credit: freepik

அதிக சர்க்கரை சேர்த்தல்: தேநீரில் அதிக சர்க்கரை சேர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக கல்லீரலில் கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். நீரிழிவு நோய் அபாயத் தையும் உண்டாக்கும்.

credit: freepik

இரவு நேரத்தில் தேநீர் குடித்தல்: தேநீரில் உள்ள காபின் தூக்கத்தை பாதிக்கக்கூடும். இதனால் சோர்வு அல்லது வளர்சிதை மாற்ற செயல்பாடு பாதிப்படையலாம். இரவு நேரத்தில் பால் அல்லது காபின் இல்லாத மூலிகை தேநீர் குடிப்பது நல்லது.

credit: freepik

உடல் அறிகுறிகளை புறக்கணித்தல்: தேநீர் குடித்த பிறகு வயிற்று வலி, மார்பு எரிச்சல், தூக்கக் குறைபாடு போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டால் அலட்சியம் செய்யக்கூடாது. அவை தேநீர் பழக்கத்தை மாற்ற வேண்டிய எச்சரிக்கை சிக்னல்களாக இருக்கலாம்.

credit: freepik

கிரீன் டீ அதிகம் பருகுதல்: கிரீன் டீ பருகுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால் அளவுக்கு அதிகம் பருகுவது, அதிலிருக்கும் தேயிலை சாறை அதிகம் பிழிந்து ருசிப்பது கல்லீரலுக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். அதனால் கிரீன் டீயை மிதமாக குடிப்பது நல்லது.

credit: freepik
சுவையான எள்ளு குழம்பு செய்வது எப்படி?