சுவையான எள்ளு குழம்பு செய்வது எப்படி?

தினத்தந்தி

தேவையான பொருட்கள்: எள்ளு – 2 மேஜைக்கரண்டி, வரமிளகாய் – 9, தனியா – 1 மேஜைக்கரண்டி, பச்சரிசி – 1 மேஜைக்கரண்டி, துவரம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி, சீரகம் – 1/2 மேஜைக்கரண்டி, வெந்தயம் – 1/2 மேஜைக்கரண்டி, சின்ன வெங்காயம் – கைப்பிடி அளவு, தக்காளி – 1, கத்திரிக்காய் – 6, முருங்கைக்காய் – 1, கடுகு – 1/2 தேக்கரண்டி, உளுந்து – 1/2 தேக்கரண்டி, கருவேப்பிலை – 2 கொத்து, நல்லெண்ணெய் – 3 கரண்டி, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, பூண்டு – 5 பல், புளி – சிறிய எலுமிச்சை அளவு (கரைத்து கொள்ளவும்)

செய்முறை: முதலில் ஒரு கடாயை சூடாக்கி, வரமிளகாய், தனியா, பச்சரிசி, துவரம் பருப்பு, சீரகம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்கவும்.

பின் எள்ளை சேர்த்து நன்றாக வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் போட்டு மையமாக அரைத்து கொள்ளவும்.

மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து மற்றும் சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.

பின் சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதன்பின் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும், அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மேலும் கொதிக்க விடவும். சுவையான எள்ளு குழம்பு ரெடி.

கோடைக்காலத்திற்கு சூப்பர் டெசர்ட் – சப்ஜா பலூடா!