தினத்தந்தி
தேவையான பொருட்கள்; கேரட் – 1, சின்ன வெங்காயம் – 5, பச்சை மிளகாய் – 1, மஞ்சள் தூள் – சிறிதளவு, முட்டை – 2, உப்பு – தேவையான அளவு
தாளிக்க; எண்ணெய், கடுகு, உளுந்து, சீரகம், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை.
செய்முறை; முதலில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட்டைத் துருவி எடுத்துக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் துருவிய கேரட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். கேரட் நன்கு வதங்கியதும் முட்டைகளை உடைத்து ஊற்றி, கேரட்டுடன் சேர்த்துக் கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரியாகவும் பூப்போலவும் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான கேரட் முட்டை பொரியல் தயார்! இதைச் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் என அனைத்து வகையான சாதங்களுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.