சத்தான காலை உணவு: கேழ்வரகு பணியாரம்!

தினத்தந்தி

கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதைக் காலை உணவில் சேர்த்துக்கொள்வது உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க உதவும். இன்று வெங்காயம், தேங்காய் சேர்த்து சுவையான கேழ்வரகு பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்; கேழ்வரகு மாவு – 1 கப், உளுந்து மாவு – ¼ கப், கடுகு – 1 தேக்கரண்டி, வெங்காயம் – 1, கடலைப்பருப்பு – ½ தேக்கரண்டி, பச்சை மிளகாய் – 2, தேங்காய் – தேவையான அளவு, கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி, கறிவேப்பிலை – 1 கைப்பிடி, நல்லெண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை; படி 1: ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, உளுந்து மாவு மற்றும் உப்பு சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இட்லி மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

படி 2: வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். தேங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

படி 4: நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துண்டுகள் மற்றும் கொத்தமல்லித்தழையைச் சேர்த்து லேசாக வதக்கவும்.

படி 5: வதக்கிய கலவையை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பணியாரம் ஊற்றுவதற்கு ஏற்ற பதத்தில் வைத்துக் கொள்ளவும்.

படி 6: பணியாரக் கல்லைச் சூடாக்கி, ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். பின்னர் மாவை ஊற்றி, மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

சுவையான கேழ்வரகு பணியாரம் தயார்! இதைத் தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.

மாலை நேரச் சிற்றுண்டி: பன்னீர் காய்கறி கட்லெட்!