தினத்தந்தி
மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிடச் சுவையான சிற்றுண்டி செய்ய விரும்புகிறீர்களா? பன்னீர் மற்றும் காய்கறிகள் சேர்த்து மொறுமொறுப்பான கட்லெட் செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்தக் கட்லெட்டை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம்.
செய்முறை; உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும். பன்னீரைத் துருவி வைத்துக் கொள்ளவும். பூண்டு, வெங்காயம் மற்றும் காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பூண்டு மற்றும் வெங்காயத்தை வதக்கவும். பின்னர் பீன்ஸ், கேரட், கோஸ் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். கடைசியாகக் குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்க்கவும்.
வதக்கிய காய்கறிகளுடன் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இப்போது துருவிய பன்னீர் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, கலவையை ஆறவிடவும்.
ஆறிய கலவையைச் சிறு உருண்டைகளாகப் பிரித்து, கட்லெட் வடிவில் தட்டையாகத் தட்டிக் கொள்ளவும். சோளமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கட்லெட்டுகளைச் சோளமாவுக் கலவையில் முக்கி, பின்னர் பிரெட் தூளில் நன்றாகப் புரட்டவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். சுவையான பன்னீர் காய்கறி கட்லெட் தயார்!