தினத்தந்தி
உலகின் முதல் தொலைக்காட்சி கண்டுபிடிப்புகளில் முக்கியப் பங்கு வகித்தவர் ஜான் லோகி பேர்ட்.
1926-ம் ஆண்டு தொலைக்காட்சியின் முதல் செயல்விளக்கத்தை அவர் பொதுமக்களிடம் காட்டினார்.
ஆரம்பகால தொலைக்காட்சிகளில் கருப்பு வெள்ளை காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன.
இந்தியாவில் 1959-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது.
ஆரம்பத்தில் வாரத்திற்கு சில மணி நேரங்கள் மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
1982-ம் ஆண்டு இந்தியாவில் வண்ணத் தொலைக்காட்சி ஒளிபரப்பு அறிமுகமானது.
தொலைக்காட்சி மூலம் நிலவில் மனிதன் கால் பதித்த வரலாற்றுச் சம்பவத்தையும் உலக மக்கள் நேரலையில் பார்த்தனர்.
இன்று தொலைக்காட்சி இணையம், ஸ்மார்ட் தொழில்நுட்பம் எனப் பல மாற்றங்களைப் பெற்றுள்ளது.