படை நோய்: காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்..!

தினத்தந்தி

யூர்டிகேரியா எனப்படும் படை நோய், தோலில் சிவப்பு தடிப்புகளும் கடும் அரிப்பும் ஏற்படும் பொதுவான சரும பிரச்சினை. சிலருக்கு இது சில நாட்கள் மட்டுமே நீடிக்கலாம்; சிலருக்கு நீண்டகாலமாகவும் தொடரலாம்.

ஏன் ஏற்படுகிறது? கத்தரிக்காய், கருவாடு, முட்டை, கடல் உணவுகள் போன்றவை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

சில மருந்துகளின் பக்கவிளைவுகள், அதிக வெயில், கடும் குளிர், தூசி போன்றவை காரணமாகவும் இது உருவாகலாம். எறும்பு அல்லது வண்டு கடியால் கூட அந்த இடத்தில் வீக்கம், தடிப்பு ஏற்பட்டு படை நோயாக மாறலாம்.

தடுக்கும் வழிமுறைகள்: பருத்தி மற்றும் தளர்வான ஆடைகள் மட்டுமே அணியுங்கள். ஜீன்ஸ், சிந்தெடிக், லெக்கிங்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும்.

வெயில்காலத்தில் தினமும் குறைந்தது இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும். மணிக்கட்டு, இடுப்பு போன்ற இடங்களில் இறுக்கமாக கயிறுகள் கட்ட வேண்டாம்.

தண்ணீரில் வேலை செய்பவர்கள் கை, கால் விரல்களின் இடையில் ஈரப்பதம் நீங்குமாறு நன்றாக துடைக்க வேண்டும்.

வீட்டில் தரைகள், சோபா கவர்கள், போர்வைகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சரியான பராமரிப்பால் படை நோயை கட்டுப்படுத்த முடியும்

படை நோய்: காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்..!