தினத்தந்தி
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து வாயைக் கொப்பளிப்பது, வாயை சுத்தமாக வைத்திருக்கவும் அசௌகரியத்தை குறைக்கவும் உதவும்.
பல் வலி இருப்பதால் பல் துலக்குவதை நிறுத்த வேண்டாம். மென்மையான toothbrush பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியை அழுத்தாமல் சுத்தம் செய்யுங்கள்.
கன்னத்தின் வெளிப்புறத்தில் துணியில் சுற்றிய ஐஸ் கட்டியை சிறிது நேரம் வைப்பது வலி மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளை தற்காலிகமாக குறைக்க உதவும்.
உணவுத் துகள்கள் பற்களுக்கு இடையில் சிக்கியிருந்தால் வலி அதிகரிக்கலாம். மெதுவாக floss செய்து அவற்றை அகற்றலாம்.
கன்னத்தின் வெளிப்புறத்தில் துணியில் சுற்றிய ஐஸ் கட்டியை சிறிது நேரம் வைப்பது வலி மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளை தற்காலிகமாக குறைக்க உதவும்.
பல் வலி இருக்கும் போது மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த உணவுகள் வலியை தூண்டலாம். அவற்றை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது.
சாக்லேட், இனிப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் பல் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். குறிப்பாக வலி இருக்கும் நேரத்தில் அவற்றை குறைக்கவும்.
வலி அதிகமாக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வலி நிவாரண மருந்து குறித்து மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. மருந்தை நேரடியாக பல்லில் வைக்க வேண்டாம்.