தினத்தந்தி
தேவையான பொருட்கள்: நுங்கு 10 துண்டுகள், தேங்காய்ப் பால் ½ கோப்பைம் பாலாடை 200 மி.லி., சர்க்கரை 200 கிராம், பால் பவுடர் 2-4 டீஸ்பூன், துருவிய பாதாம், பிஸ்தா - சிறிதளவு
செய்முறை: நுங்கை தோலுரித்து, எட்டு துண்டுகளை மட்டும் மிக்சியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர், மீதமுள்ள இரண்டு துண்டுகளை சிறிது சிறிதாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு, பாலாடையை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் சர்க்கரைத் தூள், பால் பவுடர், அரைத்த நுங்கு மற்றும் தேங்காய்ப் பாலை சேர்த்து சீராக கலந்துவிடவும்.
அடுத்து இந்தக் கலவையை மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் இக்கலவையை இட்டு, இதன்மேல், வெட்டிய நுங்கு துண்டுகளைத் தூவி 10 முதல் 12 மணி நேரம் வரை பிரிட்ஜில் வைக்கவும்.
இந்தக் கலவை குளிர்ந்த பின், இதன் மேல் துருவிய பாதம், பிஸ்தாவை தூவி பரிமாறலாம்.
கோடை காலத்துக்கு ஏற்ற நுங்கு ஐஸ்கிரீம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடக்கூடியது. உடம்புக்கு நீர்ச்சத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும்.