தினத்தந்தி
தேவையான பொருட்கள்: பேரீச்சம்பழம் – ஒரு கப், கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன், உலர் திராட்சை – அரை கப், பனை வெல்லம் – அரை கப், பாதாம் மற்றும் முந்திரி – அரை கப், தேங்காய்ப்பால் – 2 கப், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன். பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி தனியாக வைக்கவும். பனை வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
சோள மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். வெறும் வாணலியில் கசகசாவை வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.
பேரீச்சம்பழத்துடன் உலர் திராட்சை சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி உருகியதும், பாதாம் மற்றும் முந்திரியை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில் அரைத்த பேரீச்சம்பழ விழுதை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும். பின்னர் அதனுடன் பனை வெல்லத்தை சேர்த்து கிளறவும்.
பிறகு சோள மாவு கரைசலும், தேங்காய்ப்பாலும் சேர்த்து நன்றாக கலக்கவும். கசகசா பொடியை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
திக்கான பதம் வந்ததும் மேலே வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து அலங்கரிக்கவும். சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம். சூப்பரான பேரீச்சம்பழ கீர் தயார்.