சுவையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு செய்வது எப்படி?

தினத்தந்தி

தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் - 250 கிராம், பாசிப்பருப்பு - ½ கப், வெங்காயம் 1, பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன், துருவிய தேங்காய் - ¼ கப், சீரகம் - 1 டீஸ்பூன், பூண்டு - 2 பல் (விருப்பத்திற்கு), உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு - ½ டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: முதலில் பாசிப்பருப்பை கழுவி, மஞ்சள்தூள் சேர்த்து மிருதுவாக வேகவைத்துக் கொள்ளவும்.

முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாதி வேக்காடு வரும் வரை வேகவைக்கவும்.

தேங்காய், சீரகம் மற்றும் பூண்டை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் வேகவைத்த முட்டைக்கோஸ், பாசிப்பருப்பு, தேவையான உப்பு சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் மட்டும் மிதமான தீயில் சமைக்கவும்.

கூட்டு சற்று கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து, மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சுவையான, சத்தான முட்டைகோஸ் கூட்டு சாதம், சாம்பார், ரசம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

நீர்த்துப் போன உணவை வீணாக்காதீர்கள்... உடனே கெட்டியாக்கும் 8 எளிய சமையல் குறிப்புகள்!