குழந்தைகள் விரும்பும் சுவையான கேரட் கோவா லட்டு செய்வது எப்படி?

தினத்தந்தி

தேவையான பொருட்கள் : கேரட் - 200 கிராம், தேங்காய்த்துருவல் - 1 கப், பொடித்த கோவா - 1/2 கப், சர்க்கரை - 1/2 கப் அல்லது தேவைக்கு, மெல்லியதாக சீவிய பாதாம், பிஸ்தா - தேவைக்கு, உடைத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தேவைக்கு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன், அலங்கரிக்க விருப்பமான நட்ஸ் - தேவைக்கு.

செய்முறை : முதலில் கேரட்டை துருவிக்கொள்ளவும்.

நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

அதே கடாயில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கேரட்டை சேர்த்து வதக்கவும். கேரட் சிறிது வதங்கியதும் தேங்காய்த்துருவலை சேர்த்து நன்றாக கிளறவும்.

அடுத்து அதில் பொடித்த கோவாவை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் சுமார் 10 நிமிடம் வதக்கவும்.

பின்னர் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறவும். சர்க்கரை கரைந்து கலவை சுருண்டு கடாயில் ஒட்டாமல் வரும் போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சையை சேர்த்து கலந்து இறக்கவும்.

கலவை ஆறியதும் லட்டுகளாக பிடித்து, மேலே பாதாம் மற்றும் பிஸ்தா சீவலால் அலங்கரித்து பரிமாறவும். சூப்பரான கேரட் கோவா லட்டு ரெடி.

உடலுக்கு வலிமை தரும் உளுந்தங்களி!