சுவையான கொத்தவரங்காய் பொரியல் செய்வது எப்படி?

தினத்தந்தி

கொத்தவரங்காய் உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் ஒன்றாகும். இதில் நார்ச்சத்து மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

தேவையான பொருட்கள்: கொத்தவரங்காய் - 1/4 கிலோ, பெரிய வெங்காயம் - 1, மஞ்சள்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, பூண்டு - 4 பல், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்தம் பருப்பு - 1/4 டேபிள்ஸ்பூன், கருவேப்பிலை - 1 கொத்து.

முதலில் கொத்தவரங்காயை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேக வைத்த கொத்தவரங்காயை சேர்க்கவும்.

அதன்பின் மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடங்கள் சமைக்க வேண்டும். பின்னர் இடித்த பூண்டை சேர்த்து கிளறவும்.

இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து ஒரு முறை கிளறி அடுப்பை அணைத்தால் சுவையான கொத்தவரங்காய் பொரியல் தயார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

ஈஸியான சிக்கன் பாப்கார்ன்.. சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி!