சுவையான இறால் பிரைட் ரைஸ் செய்வது எப்படி?

தினத்தந்தி

தேவையான பொருட்கள்: இறால் - 200 கிராம், இஞ்சி - 2 அங்குல துண்டு, வெங்காயம் - 1, கேரட் - 1, பீன்ஸ் - 5, குடைமிளகாய் - 1, முட்டைக்கோஸ் - 50 கிராம், முட்டை - 2, வடித்த சாதம் - 2 கப், உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :முதலில் வெங்காயம், கேரட், பீன்ஸ், குடைமிளகாய் மற்றும் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி மற்றும் இறாலை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் அடித்து வைத்த முட்டையை சேர்த்து நன்றாக உதிரியாகும் வரை கிளறவும். விருப்பப்பட்டால் சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.

அதன்பின் வடித்த சாதம் மற்றும் வதக்கிய இறாலை சேர்த்து அனைத்தும் ஒன்றாக கலக்கும் வரை நன்றாக கிளறவும்.

சில நிமிடங்கள் வதக்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கினால் மணமணக்கும் சுவையான இறால் பிரைட் ரைஸ் தயார்.

உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் சத்தான கோதுமை பாயாசம்!