மாலை தேநீர் நேரத்துக்கு சூப்பர் ரவா வடை செய்வது எப்படி?

தினத்தந்தி

தேவையான பொருட்கள்: ரவை – 1 கப், அரிசி மாவு – 1/4 கப், கொத்தமல்லி – 1/2 கப், கறிவேப்பிலை – 1/2 கப், பச்சை மிளகாய் – 6, வெங்காயம் – 2, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் அதில் உப்பு சேர்த்து கலந்து, 1 டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெயை ஊற்றி கரண்டியால் நன்றாக கிளறவும்.

அதன்பின் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வடை பதத்திற்கு கலக்கவும்.

இந்த கலவையை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ரவை நன்றாக ஊறியதும் கலவை சற்று கெட்டியாகும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிக்க தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

பின்னர் கலவையை எடுத்து வடை வடிவில் தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான ரவா வடை தயார்!

மணமும் ருசியும் கலந்த மட்டன் வெள்ளை குருமா!