தினத்தந்தி
தேவையான பொருட்கள்: ஈரல் - 500 கிராம், சின்ன வெங்காயம் - 150 கிராம், பச்சை மிளகாய் - 2, வர மிளகாய் - 5, மிளகுத்தூள் - 2 டேபிள் ஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - இரண்டு கொத்து, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை : முதலில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஈரலை போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதில் ஊறவைத்த ஈரல் கலவையை சேர்த்து நன்றாக கிளறவும்.
அடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும். இவ்வாறு வேக வைத்தால் ஈரல் மென்மையாக இருக்கும். ஈரல் முக்கால் பாகம் வெந்ததும் மீண்டும் கிளறவும்.
பின்னர் மீதமுள்ள மிளகுத்தூளை தூவி நன்றாக கிளறி வறுக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும். கடைசியாக அதன் மேல் கொத்தமல்லித்தழை தூவினால் மணமும் காரமும் நிறைந்த சுவையான ஆட்டு ஈரல் மிளகு வறுவல் தயார்.