இளநரையை குறைக்க வீட்டிலேயே தயாரிக்கலாம் சீயக்காய் ஷாம்பு!

தினத்தந்தி

இன்றைய இளைஞர்கள் அதிகமாக சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது இளநரை தான். இதற்கு நமது உணவு முறைகள், காலநிலை மாற்றம் அல்லது மரபு காரணங்களாக இருக்கலாம்.

பெண்களுக்கு கூந்தல் மிக முக்கியமான அழகாக கருதப்படுகிறது. கூந்தலை பாதுகாக்கவும், அதை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்கவும் உதவும் ஒரு இயற்கை முறையை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். அதற்காக சீயக்காய் பயன்படுத்தி இயற்கை ஷாம்பு தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: சீயக்காய்- ஒரு கிலோ, வெந்தயம்- 50 கிராம், பச்சை பயறு- 50 கிராம், காயவைத்த எலுமிச்சம் பழம் தோல்- 50 கிராம், கறிவேப்பிலை- 50 கிராம் ஆகியவை.

செய்முறை: முதலில் ஒரு கிலோ சீயக்காய் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் வெந்தயம், பச்சைப் பயறு, எலுமிச்சை தோல் மற்றும் கறிவேப்பிலையை நன்றாக காய வைத்து பொடியாக அரைத்து சேர்க்க வேண்டும்.

பின்னர் இந்த பொடியுடன் சாதம் வடித்த தண்ணீர் அல்லது வெந்நீர் சேர்த்து பசையாக கலக்க வேண்டும்.

இந்த கலவையை தலையில் தடவி குளித்து வந்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தொடர்ந்து பயன்படுத்தினால் இளநரையை குறைக்க உதவலாம்.

மேலும், சீயக்காயை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் உஷ்ணம் மற்றும் பித்தம் குறையும். ரசாயனங்கள் உள்ள ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்துவதால் முடி வெள்ளையாகும் வாய்ப்பு இருப்பதால் இயற்கையான சீயக்காய் பொடியை பயன்படுத்துவது நல்லது.

பழச்சாறுகளை விட பழங்கள் ஏன் சிறந்தவை தெரியுமா?