பூண்டு - சின்ன வெங்காய புளிக்குழம்பு செய்வது எப்படி?

தினத்தந்தி

சூடான சாதத்துடன் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து செய்த புளிக்குழம்பு சாப்பிட்டால் அருமையான சுவையை தரும். இது வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய பாரம்பரிய ரெசிபி.

தேவையான பொருட்கள் :சின்ன வெங்காயம் -100 கிராம், பூண்டு -20, கறிவேப்பிலை - சிறிது, புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவையானது, சாம்பார் பொடி -1 ஸ்பூன், மஞ்சள் தூள் - சிறிது, வெல்லம் - சிறிது

தாளிக்க :நல்லெண்ணெய் - தேவையான அளவு, கடுகு - சிறிதளவு, வெந்தயம் - சிறிதளவு, க.பருப்பு - சிறிதளவு, சீரகம் - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு.

செய்முறை :முதலில் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளிக்கவும். பின்னர் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பொடியின் வாசனை போகும் வரை கிளற வேண்டும்.

அடுத்து கறிவேப்பிலை சேர்த்து, கரைத்த புளிநீரை ஊற்றி உப்பு சேர்க்கவும்.

குழம்பு நன்றாக கொதித்து சற்று கெட்டியாக ஆரம்பித்ததும் வெல்லம் சேர்க்கவும்.

எண்ணெய் மேலே மிதக்கும் வரை நன்றாக கெட்டியாகும் போது அடுப்பை அணைத்து இறக்கவும்.

நெத்திலி கருவாடு தொக்கு - கிராமத்து ஸ்டைல் ரெசிபி!