வாயில் போட்டதும் கரையும் சுவையான பாதுஷா செய்வது எப்படி?

தினத்தந்தி

மைதா மாவு - 250 கிராம், வெண்ணெய் - 50 கிராம், பேக்கிங் சோடா - ¼ டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ¼ டீஸ்பூன், தயிர் - 100 கிராம், சர்க்கரை - 250 கிராம், எண்ணெய் - தேவையான அளவு.

அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் வெண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி காய்ச்சவும். பிசுபிசுப்பான பதம் வந்ததும் சர்க்கரைப் பாகை அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

ஊறவைத்த மைதா மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, வடை போல் தட்டிக் கொள்ளவும். நடுவில் பெருவிரலால் லேசாக அழுத்தி சிறிய பள்ளம் ஏற்படுத்தவும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி, பாதுஷாக்களை மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை மெதுவாகப் பொரித்தெடுக்கவும். பின்னர் அவற்றை சூடான சர்க்கரைப் பாகில் சிறிது நேரம் ஊறவிடவும்.

சர்க்கரைப் பாகை நன்றாக உறிஞ்சியதும் பாதுஷாக்களை எடுத்து பரிமாறலாம். சுவையான, தித்திப்பான தீபாவளி ஸ்பெஷல் பாதுஷா தயார்.

வாழைப்பழ பருப்பு பாயாசம்!