தினத்தந்தி
மூன்று வகையான பருப்புகளை வைத்து செய்யும் பாயாசம் மிகவும் அருமையாக இருக்கும். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், வெல்லம் - 200 கிராம், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் - 3 ,முந்திரி, திராட்சை - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன் ஆகியவை.
செய்முறை: முதலில் பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் ஊறவைத்த பச்சரிசியை ஏலக்காய் மற்றும் தேங்காய்த் துருவலை சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும்.
பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைத்து தேவையான தண்ணீர்விட்டு குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்து வைக்கவும்.
வெல்லத்தைப் பொடித்துச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி வைக்கவும்.
பிறகு வேகவைத்த பருப்புக் கலவையை அடுப்பில் ஏற்றி தேங்காய் - அரிசிக் கலவை மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு பால் சேர்க்கலாம். சூப்பரான முப்பருப்புப் பாயாசம் ரெடி.