தினத்தந்தி
ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
பெருங்காயம் தாளிக்கும் போது எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
பிரிட்ஜில் வாழைப்பழமும் உருளைக்கிழங்கும் வைக்கக்கூடாது.
குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.