தினத்தந்தி
சப்பாத்தி, நான், சாதம், தோசை, இட்லி ஆகியவற்றுடன் தொட்டுக்கொள்ள ஏற்ற சுவையான காடை பெப்பர் கிரேவியை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம்.
காடையை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாகக் குழையும் வரை வதக்கவும். பின்னர் காடை, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து ¼ கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
காடை ஓரளவு வெந்ததும் தயிர் சேர்த்து குறைந்த தீயில் வேகவிடவும். பின்னர் அரைத்த மசாலாப் பொடியைச் சேர்த்துக் கிளறி, காடை நன்றாக வேகும் வரை குறைந்த தீயில் சமைக்கவும்.
கிரேவியில் எண்ணெய் பிரிந்து வந்ததும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான காடை பெப்பர் கிரேவியை நெய் சாதம், சப்பாத்தி, ரசம் சாதம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.