ரோட்டு கடை காளான் முட்டைகோஸ் மசாலா செய்வது எப்படி?

தினத்தந்தி

காளான் மற்றும் முட்டைகோஸ் வைத்து சுவையான, மொறுமொறுப்பான மசாலா செய்து சாப்பிடலாம். வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த உணவு, சாதம், சப்பாத்தி அல்லது சிற்றுண்டியாகவும் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்; முட்டைகோஸ் – 1 சிறியது, காளான் – 1 பொட்டலம், மைதா – 100 கிராம், சோளமாவு – 50 கிராம், வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜைக்கரண்டி, பச்சை மிளகாய் – 3, கொத்தமல்லி – தேவையான அளவு, கருவேப்பிலை – தேவையான அளவு, மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி, மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, கரம் மசாலா – 1½ தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 250 மில்லி.

செய்முறை; முதலில் முட்டைகோஸ் மற்றும் காளானை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டைகோஸ் மற்றும் காளானை சேர்த்து, அதனுடன் மைதா, சோளமாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும்.

இவற்றை சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாகக் கலக்கி, காளான் மற்றும் முட்டைகோஸில் மசாலா நன்றாகப் படும்படி தயார் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயார் செய்து வைத்த கலவையை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்து எடுத்து வைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் தேவையான மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறி, சோளமாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். கலவை கொதிக்கத் தொடங்கியதும், பொரித்து வைத்துள்ள காளான் மற்றும் முட்டைகோஸ் கலவையை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

மசாலா நன்றாக வற்றி காளான் மற்றும் முட்டைகோஸில் ஒட்டியதும், மேலே நறுக்கிய கொத்தமல்லி மற்றும் சிறிதளவு வெங்காயம் தூவி இறக்கி பரிமாறலாம்.

உருளைக்கிழங்கு காரக் குழம்பு செய்வது எப்படி?