தினத்தந்தி
சிக்கனில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு சிக்கன் என்றாலே மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் சிக்கன் டென்டெர்ஸ் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
செய்முறை; முதலில் எலும்பில்லாத சிக்கனை நன்றாக சுத்தம் செய்து நீளமான துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதனுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்து சுமார் 30 நிமிடங்கள் ஊறவிடவும். இதனால் மசாலா சிக்கனில் நன்றாக இறங்கி சுவை அதிகரிக்கும்.
அடுத்து பிரெட் துண்டுகளை சிறிய துண்டுகளாக நறுக்கி அல்லது பொடியாக உதிர்த்து வைத்துக்கொள்ளவும். வால்நட்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளலாம்.
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தயாராக வைத்துள்ள சிக்கன் துண்டுகளை மிதமான தீயில் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்தெடுக்கவும்.
இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சூப்பரான சிக்கன் டென்டெர்ஸ் தயார். தக்காளி சாஸ் அல்லது மயோனைஸுடன் பரிமாறினால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்!