தினத்தந்தி
வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து எடுத்துக்கொள்ளவும்.
உப்பு, மிளகாய்த் தூள், மிளகுத் தூள் மற்றும் பிரெட் தூள் சேர்த்துக் கலக்கவும்.
கலவையை வட்ட வடிவில் தட்டி பர்கர் கட்லெட்டாகத் தயாரிக்கவும்.
தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பர்கர் பன்னை இரண்டாக வெட்டி, தவாவில் லேசாக வறுக்கவும்.
பன்னின் இரண்டு பகுதிகளிலும் தக்காளி சாஸ் அல்லது மயோனைஸ் தடவவும்.
பன்னின் மேல் லெட்டியூஸ், கட்லெட், சீஸ், தக்காளி மற்றும் வெங்காயத் துண்டுகளை அடுக்கவும்.
மேலே பன்னின் மற்றொரு பகுதியை வைத்து மெதுவாக அழுத்திப் பரிமாறவும்.