கல்யாணவீட்டு உருளைக்கிழங்கு - பட்டாணி பொரியல் செய்வது எப்படி?

தினத்தந்தி

உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, பட்டாணியை வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 200 கிராம், பச்சை பட்டாணி - 1 கப், பூண்டு - 5 பல், வெங்காயம் - 2, தக்காளி - 1, இஞ்சி - சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு, தனி மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன், கரம்மசாலா தூள் - 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் - சிறிது, கொத்தமல்லி - சிறிதளவு,

தாளிக்க : எண்ணெய் - தேவைக்கு, கடுகு - 1/4 ஸ்பூன், உ.பருப்பு - 1/2 ஸ்பூன், சோம்பு - 1/2 ஸ்பூன் ஆகியவை.

செய்முறை : வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கு, பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

பின் பூண்டு, இஞ்சி, 1/4 ஸ்பூன் சோம்பை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த இஞ்சி விழுதை போட்டு கிளறவும். அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு வதக்கவும். அடுத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

அனைத்து சேர்ந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். செட்டிநாடு உருளைக்கிழங்கு - பட்டாணி பொரியல் ரெடி.

கேரளாவில் மட்டும் கிடைக்கும் மறக்கமுடியாத அனுபவங்கள்!