டிஜிட்டல் உலகில் மூளை ஆரோக்கியத்தை காப்பது எப்படி?

தினத்தந்தி

உடல் நலத்தை பேணுவதுபோலவே மூளையின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது மிகவும் அவசியமானது. ஆரோக்கியமான மூளை தான் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது.

காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் செலவிடுவது மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இது கவன சக்தியையும் மன உற்சாகத்தையும் அதிகரிக்க உதவும்.

ஒமேகா-3 சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன், வால்நட், பாதாம் போன்றவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.

செல்போன், டி.வி. மற்றும் பிற டிஜிட்டல் திரைகளில் செலவிடும் நேரத்தை குறைப்பது நல்லது. மூளைக்கும் போதிய ஓய்வு தேவைப்படுகிறது.

இயற்கையோடு நேரம் செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்க உதவும். பூங்கா, தோட்டம் அல்லது இயற்கை சூழலில் சில நேரம் இருப்பது மன அமைதியை தரும்.

தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் மனத்தெளிவை அதிகரிக்கின்றன. தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்வது மூளையின் செயல்திறனை மேம்படுத்தும்.

போதுமான தூக்கமும் உடற்பயிற்சியும் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. நல்ல தூக்கம் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.

இரவு நேரங்களில் அதிக நேரம் சமூக வலைத்தளங்களில் செலவிடுவது, துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது மற்றும் மன அழுத்தத்தில் இருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து ஆழ்ந்து சுவாசித்தால் மனம் லேசாகி புத்துணர்ச்சி கிடைக்கும்.

மழைக்காலத்தில் கொசுக்களை விரட்ட எளிய வழிகள்..!