மழைக்காலத்தில் கொசுக்களை விரட்ட எளிய வழிகள்..!

தினத்தந்தி

மழைக்காலம் தொடங்கியவுடன் வீடுகளில் கொசுக்களின் தொல்லை அதிகரிக்க தொடங்கும். கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு போன்ற ஆபத்தான நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால் ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும்.

பலர் கொசுவர்த்தி சுருள், ஸ்பிரே மற்றும் கொசு விரட்டி திரவங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இவற்றில் இருக்கும் ரசாயனங்கள் சுவாச பிரச்சினைகள் மற்றும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

கொசுக்கள் வீட்டுக்குள் நுழைவதை தடுக்க ஜன்னல் மற்றும் கதவுகளில் கொசு வலை பொருத்துவது மிகவும் நல்லது. மாலை நேரத்தில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பதும் உதவும்.

சாமந்தி, துளசி, புதினா, லெமன் கிராஸ், லாவண்டர் போன்ற செடிகளை வீட்டில் வளர்ப்பது கொசுக்களை இயற்கையாக விரட்ட உதவும்.

பூண்டு சாற்றையும் கொசு விரட்டியாக பயன்படுத்தலாம். பூண்டை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அறைகளில் தெளித்தால் கொசுக்கள் அருகில் வராது.

வீட்டின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஏ.சி., குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றின் பின்புறத்தில் தேங்கும் தண்ணீரை உடனே அகற்ற வேண்டும்.

எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் கிராம்புகளை சொருகி அறைகளில் வைத்தால் அதன் வாசனை கொசுக்களை விரட்ட உதவும்.

சோப்பு கலந்த தண்ணீரையும் கொசுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். அகன்ற பாத்திரத்தில் சோப்பு நீரை வைத்து விட்டால் கொசுக்கள் அதில் சிக்கி அழியும்.

ரசாயன பொருட்களை அதிகம் பயன்படுத்தாமல், இயற்கை முறைகளை பின்பற்றுவது குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும்.

சர்க்கரை நோயாளிகள் பாப்கார்ன் சாப்பிடலாமா?