இட்லி - தோசை; உடல் எடையை குறைக்க எது சிறந்தது தெரியுமா?

தினத்தந்தி

இட்லி வயிற்றுக்கு இதமானவை. ஆனால் பருப்பு மற்றும் நார்ச்சத்து கொண்ட சாம்பாருடன் சேர்த்து சாப்பிடாத பட்சத்தில், சாப்பிட்ட ஓரிரு மணி நேரங்களிலேயே பசி ஏற்படக்கூடும்.

தோசை மொறுமொறுப்பானவை, அளவில் பெரியவை. வயிற்றை நிறைவாக வைத்திருக்கக்கூடியவை. பன்னீர், முளைகட்டிய பயறுகள் அல்லது காய்கறிகளை சேர்த்து விரும்பியபடி தோசை தயாரிக்கலாம். அப்படி தயாரிக்கப்படும் தோசைகளை சாப்பிடுவது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும்.

இட்லி புளிக்கவைக்கப்பட்டு நீராவியில் வேகவைக்கப் படுவதால், எளிதில் செரிமானமாகும் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்களில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு ஏற்றது.

தோசையிலும் புளிக்கவைத்தல் செயல்முறை நடப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு உதவிடும். ஆனால் அதில் பயன்படுத்தப்படும் எண்ணெய் காரணமாக இட்லியை விட செரிமானமாகுவதற்கு சற்று கடினமாக இருக்கும்.

ஒரு சாதாரண இட்லியில் (35 முதல் 50 கிராம்) சுமார் 40 முதல் 50 கலோரிகள் உள்ளன. ஒரு சாதாரண தோசையில் (80 முதல் 100 கிராம்) சுமார் 100 முதல் 120 கலோரிகள் உள்ளன.

நீராவியில் வேகவைக்கப்படும் இட்லிகள் எளிதில் செரிமானமாகக்கூடியவை, ஊட்டச்சத்து நிறைந்தவை. கலோரிகள் குறைவாக உள்ள உணவை சாப்பிட விரும்புபவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு இட்லியை தேர்ந்தெடுக்கலாம்.

எது சிறந்தது? குறைந்த கலோரி அளவு, எளிதில் செரிமானமாகும் தன்மை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இட்லியே காலை நேர சிறந்த உணவாக அமைந்திருக்கிறது.

ரெட் வெல்வெட் கேக்: சுவைக்கு பின்னால் மறைந்திருக்கும் ஆரோக்கிய அபாயம்!