கோடைகாலத்தில் தினமும் இளநீர் குடித்தால்… உடலில் நடக்கும் அதிசயங்கள்!

தினத்தந்தி

கோடைக்காலம், குளிர்காலம் என எல்லா காலங்களிலும் நமது உடல் உஷ்ணத்தை குறைக்க அதிகமாக உதவுவது இளநீர்.

இளநீரில் வைட்டமின் C, அமினோ அமிலங்கள், நார்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு கால்சியம் மற்றும் பொட்டாசியம் மிகவும் அவசியம். அவர்களுக்கும் இளநீர் ஒரு சிறந்த தேர்வாகும்.

இதில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம் போன்ற மினரல்கள் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன.

நம் சருமத்தில் உள்ள புள்ளிகள், கருவளையங்கள், பருக்கள் போன்றவற்றை குறைக்க இளநீர் அருந்துவது உதவியாக இருக்கும்.

புற்றுநோயை எதிர்க்கும் தன்மையும் இளநீருக்கு உள்ளது. இதை அருந்துவதன் மூலம் உடலில் தீங்கு விளைவிக்கும் செல்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

இளநீரை தொடர்ந்து அருந்துவதன் மூலம் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் உருவாகுவதைக் குறைக்க உதவலாம்.

இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்க உதவுகிறது.

இளநீரில் கொழுப்பு குறைவாக இருப்பதால், இதை தினமும் அளவோடு அருந்தினால் உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவும்.

எலுமிச்சை + உப்பு + நீர்: உடலுக்கு தரும் அற்புத பலன்கள்!