தினத்தந்தி
பகலில் ஓட்டுவதை விட, இரவில் வாகனம் ஓட்டும் போது முன்கண்ணாடி சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியம். தெளிவான பார்வை பாதுகாப்பான ஓட்டத்திற்கு அவசியம்.
கண்ணாடியை சுத்தமாக வைத்திருக்கவும் : எதிரில் வரும் வாகனங்களை தெளிவாகப் பார்க்க, கண்ணாடி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
சரியான துணி பயன்படுத்தவும்: கண்ணாடியை துடைக்க மென்மையான காட்டன் அல்லது மைக்ரோஃபைபர் துணி பயன்படுத்தவும். இதனால் கீறல்கள் ஏற்படாது.
ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டாம்: தேவையற்ற ஸ்டிக்கர்களை கண்ணாடியில் ஒட்டாமல் இருக்கவும். பழைய ஸ்டிக்கர்களை அகற்றும் போது கீறல் ஏற்படும் அபாயம் உள்ளது.
Defogger-ஐ சரியாக பயன்படுத்தவும்: கண்ணாடியில் பனி/ஆவி படரும்போது மட்டும் Defogger-ஐ ஆன் செய்யவும். தெளிவானதும் உடனே ஆஃப் செய்ய வேண்டும். நீண்ட நேரம் பயன்படுத்தினால் வெப்பம் காரணமாக கண்ணாடி பாதிக்கப்படும்.
வைப்பர் பிளேடு -ஐ சரிபார்க்கவும்: வைப்பர் பிளேடு பழுதாக இருந்தால் உடனே மாற்றவும். இல்லையெனில் கண்ணாடியில் கீறல் ஏற்படும்.
வெயிலில் நிறுத்தும் போது கவனம்: அதிக வெயிலில் காரை நிறுத்தும் போது, ஒரு கண்ணாடியை சிறிது திறந்துவிடவும். இதனால் உள்ளே வெப்பம் அதிகரித்து கண்ணாடி விரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
இந்த சின்ன சின்ன டிப்ஸ்களை பின்பற்றினால், உங்கள் காரின் கண்ணாடி நீண்ட நாள் பாதுகாப்பாகவும், உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் இருக்கும்!