இரும்புச்சத்து நிறைந்த பாலக்கீரை கூட்டு... சுவையும் ஆரோக்கியமும் ஒரே உணவில்!

தினத்தந்தி

பாலக்கீரை இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான கீரை வகையாகும். இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்தால் உடலுக்கு தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

தாளிப்பதற்கு 2 டீஸ்பூன் எண்ணெய், 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை எடுத்துக் கொள்ளவும்.

முதலில் துவரம்பருப்பை நன்றாகக் கழுவி மென்மையாக வேகவைத்து லேசாக மசித்து வைத்துக் கொள்ளுங்கள். பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லித்தழையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். கீரை சுருங்கி வெந்த பிறகு, வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.

அதன்பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். இறுதியாக துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லித்தழையை சேர்த்து ஒரு முறை கிளறி அடுப்பை அணைக்கவும்.

மணமார்ந்த, சத்தான பாலக்கீரை கூட்டு தயார். இது சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த இந்தக் கூட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான உணவாகும்.

சமையலை சுவையாக மாற்றும் 9 எளிய கிச்சன் டிப்ஸ்!