ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறதா? கவனிக்க வேண்டியவை!

Subash T & தினத்தந்தி

1. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பொதுவாக 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும். மாதவிடாய் தொடர்ந்து ஒழுங்கற்றதாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

2. மனஅழுத்தம், உடல் எடை மாற்றம், உடற்பயிற்சியின்மை மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கலாம்.

3. சினைப்பை நீர்க்கட்டி நோய்க்குறி, கருப்பை நார்த்திசுக் கட்டிகள், அடினோமைோசிஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் போன்ற பிரச்சினைகள் ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக உதிரப்போக்கு மற்றும் கடுமையான வயிற்றுவலியை ஏற்படுத்தலாம்.

4. எள், உளுந்து, பருப்பு வகைகள், கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும்.

5. தினசரி நடைப்பயிற்சி, யோகா, போதுமான தூக்கம் மற்றும் சீரான உணவுப்பழக்கம் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.

6. மாதவிடாய் மூன்று மாதங்கள் வரை வராமை, அதிக உதிரப்போக்கு அல்லது கடுமையான வலி இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

7. மூலிகைச் சாறுகள் மற்றும் வீட்டுவைத்தியங்களை மருத்துவரின் ஆலோசனையின்றிப் பயன்படுத்த வேண்டாம். மாதவிடாய் பிரச்சினைகளுக்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.

8. சத்தான உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.

மனதுக்கும் உடலுக்கும் உள்ள வியக்க வைக்கும் தொடர்பு!