காட்டுயானம் அரிசி உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததா?

தினத்தந்தி

பாரம்பரிய அரிசி வகைகளில் மற்ற அரிசிகளுக்கு இல்லாத பல சிறப்புகள் காட்டு யானம் அரிசிக்கு உள்ளது. இந்த அரிசியை சாப்பிட்டால் யானையைப் போல பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் இதற்கு காட்டுயானம் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

பாரம்பரிய அரிசி வகைகளில் மற்ற அரிசிகளுக்கு இல்லாத பல சிறப்புகள் காட்டு யானம் அரிசிக்கு உள்ளது. இந்த அரிசியை சாப்பிட்டால் யானையைப் போல பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் இதற்கு காட்டுயானம் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

சத்துக்கள் நிறைந்தது: காட்டுயானம் அரிசியில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளன. அதோடு ஆந்தோசயனின் (Anthocyanin) போன்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள், பிளவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது: இந்த அரிசியின் கிளைசெமிக் குறியீடு (GI) மிகவும் குறைவாக இருப்பதால், நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் இதை அளவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்க உதவும்: காட்டுயானம் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள எல்டிஎல் (LDL) கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி பல்வேறு தொற்றுகளைத் தடுக்க உதவுகின்றன.

உடல் டீடாக்ஸ் செய்யும்: காட்டுயானம் அரிசி இயற்கையான டீடாக்ஸிங் தன்மை கொண்டது. இது கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் குடல் போன்ற உறுப்புகளை சுத்தப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இரும்புச்சத்து அதிகம்: இந்த அரிசியில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து அனீமியா பிரச்சினையை குறைக்க உதவலாம்.

மன அழுத்தத்தை குறைக்கும் : காட்டுயானம் அரிசியை உணவில் சேர்ப்பதால் கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தி குறைந்து, மன அமைதி கிடைக்கவும் மன அழுத்தம் குறையவும் உதவுகிறது.

அன்றாட உணவில் பச்சைப்பயிறு சாப்பிடலாமா?