இதுதான் முடி கொட்டுவதற்கான காரணமா?

தினத்தந்தி

முடி உதிர்வுக்கான காரணங்கள்.....பரம்பரையாக முடி கொட்டுதல் என்பது ஒரு காரணம் என்றாலும், நாம் நமது பண்புகளை மாற்றிக் கொள்வதன் மூலம் நிச்சயமாக இதை ஜெயிக்க முடியும்.

உடல் சூடு: உடலில் அதிக உஷ்ணம் ஏற்படுவது ஹார்மோன் சமநிலையின்மையை உண்டாக்கி, பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிப்பதன் மூலம் முடி கொட்டுகிறது.

அதிக சிந்தனை: தொடர்ந்து காலை முதல் இரவு வரை அதிகமாக சிந்தித்த வண்ணம் இருப்பவர்களுக்கு முடி கொட்டும். தொடர்ந்து மூளைக்கு அதிக வேலை கொடுப்பதால் மூளை நரம்புகள் கொதிப்படைந்து இப்படி நிகழ்கிறது.

தூக்கமின்மை: பலருக்கும் ஆழ்ந்த நித்திரை இருக்காது. அதனால் மன அழுத்தம், மனச்சோர்வு, நரம்பு பலவீனம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதனால் முடி கொட்டும். உதிர்ந்த முடியானது வளராமல் இருக்கும்.

உணவு: அதிக காரம், எண்ணெய் மற்றும் மாமிச உணவுகள் நாளமில்லா சுரப்பிகளைப் பாதித்து முடி கொட்டுதலை உண்டாக்கும். சத்தான உணவுமுறை முடி வளர்ச்சிக்கு முக்கியம்.

எண்ணெய் தேய்த்துக் குளித்தல்: ஆண்கள் வாரம் ஒருமுறை சனி / புதனும், பெண்கள் செவ்வாய் / வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முடி கொட்டுதலைத் தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

குளிக்கும் தண்ணீர்: உப்புத் தண்ணீரில் தொடர்ந்து குளிப்பதாலோ, அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் தண்ணீரை மாற்றி மாற்றி குளிப்பதாலோ தலைமுடி கொட்டும்.

காய்கறிகள் பிரஷ்ஷாக இருக்கணுமா? இதை ட்ரை பண்ணுங்க.!