தினத்தந்தி
தக்காளியை நன்கு கழுவ வேண்டும். பின் ஒரு பவுலில் உப்பு போட்டு அதில் கழுவி வைத்துள்ள தக்காளியை புரட்டி எடுக்கவும். இப்படி செய்வதன் மூலம் தக்காளி நீண்ட நாள் அழுகாமல் இருக்கும்.
தேங்காயை நன்கு கழுவி ப்ரிட்ஜில் வைத்தால் 6 மாதம் ஆனாலும் கெடாமல் பிரஷ்ஷாகவே இருக்கும்.
பச்சை மிளகாயை காம்புகளை நீக்கிவிட்டு பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு மூடி ப்ரிட்ஜில் வையுங்கள்.
வெங்காயத்தை டிரேயில் வைப்பதாக இருந்தாலும், கீழே கொட்டி வைப்பதாக இருந்தாலும் அதன் அடியில் நியூஸ் பேப்பர் போட்டு அதில் வெங்காயத்தின் காம்புகள் கீழ்புறமாக இருக்கும்படி வைக்க வேண்டும். அப்படி வைத்தால் அழுகாது.
காலியான அட்டைப் பெட்டியில் நியூஸ் பேப்பரை போட்டு அதன் மீது உருளைக்கிழங்கை போட்டு வைக்க வேண்டும். பின் அட்டை பெட்டியை பாதி அளவு மூடி வைக்க வேண்டும். முழுவதுமாக மூட கூடாது. இப்படி வைத்தால் இரண்டு வாரம் வரை உருளைக்கிழங்கு ப்ரெஷ்ஷாக இருக்கும்.
பூண்டை தனி தனி பற்களாக பிரித்து காற்றோட்டமாக வைக்க வேண்டும். இப்படி வைத்தால் பூண்டு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
முருங்கைகாயை பாதி பாதியாக வெட்டி கொள்ளவும். பின் ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்து முருங்கைகாயை அதில் சுற்றி வைத்தால் 4 நாட்கள் வரை காய்ந்து போகாமல் இருக்கும்.