சுவையான ஐயங்கார் வீட்டு எள் சாதம்!

தினத்தந்தி

எளிய முறையில் வீட்டிலேயே சுவையான ஐயங்கார் எள் சாதம் செய்து அசத்தலாம். கோயில் பிரசாதம் போன்ற சுவையில் எள் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்; பச்சரிசி – 1 கப், எள் – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை; பச்சரிசியை உதிரியாக வேகவைத்து ஆறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விடாமல் எள்ளைப் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுக்கவும்.

வறுத்த எள், மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.

அதனுடன் வேகவைத்த சாதம், தேவையான உப்பு, எள் பொடி சேர்த்து நன்றாகக் கிளறவும். சுவையான ஐயங்கார் எள் சாதம் தயார்!

குறிப்பு: விருப்பப்பட்டால் ஒரு தேக்கரண்டி இட்லி மிளகாய்ப் பொடி சேர்க்கலாம். காய்ந்த மிளகாய்க்குப் பதிலாக மிளகையும், நல்லெண்ணெய்க்குப் பதிலாக நெய்யையும் பயன்படுத்தலாம்.

வீட்டிலேயே ஆரோக்கியமான கிரில் சிக்கன் செய்வது எப்படி?