தினத்தந்தி
பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுக் கோளாறுகளை குறைக்க உதவுகிறது.
குறைந்த கலோரி கொண்ட பழமாக இருப்பதால், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகிறது.
வைட்டமின் ஏ நிறைந்துள்ள பலாப்பழம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், தோலை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
மெக்னீசியம் சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளின் எலும்புகள் வலுவடையவும், எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.
இரும்புச்சத்து இருப்பதால் ரத்தசோகை ஏற்படும் அபாயத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
பலாப்பழம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் சிறந்த இயற்கை உணவாகும். இதில் உள்ள தாதுக்கள் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன.
பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு வயிற்றுக் கோளாறுகள் ஏற்படலாம். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
சர்க்கரைச் சத்து அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பலாப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.