கண்களின் ஆரோக்கியத்தை காக்கும் ஜூஸ்கள்!

தினத்தந்தி

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் கண் பார்வை குறைபாடு ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்புகிறவர்கள் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்றையும் சேர்த்து ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். இது “ABC ஜூஸ்” என்று அழைக்கப்படுகிறது.

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் A கண் பார்வைக்கு முக்கியமானவை. பீட்ரூட்டில் உள்ள லூட்டின், ஜியாசாந்தைன் போன்றவை விழித்திரை (Retina) ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

தக்காளியில் உள்ள லூட்டின், ஜியாசாந்தைன், கரோட்டினாய்டுகள் போன்றவை கண்புரை மற்றும் வயதுச்சார்ந்த பார்வை குறைபாடுகளைத் தடுக்க உதவுகின்றன.

கற்றாழை ஜூஸ் பருகுவது கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும். இது கண்பார்வை திறனை மேம்படுத்தவும், கண்புரை அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.

புளுபெர்ரி ஜூஸ் பருகுவது கண்புரை பிரச்சினையைத் தடுக்க உதவலாம். மேலும், இதயநோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்க உதவும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இதில் அதிகம் உள்ளன.

நெல்லிக்காய் ஜூஸ்: இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் C கண் திசுக்களைப் பாதுகாத்து பார்வையை மேம்படுத்துகிறது.

சீசன் வந்தாச்சு, ஆனால் மாங்காய்- மாம்பழம் எது சிறந்தது தெரியுமா?