கே. பாக்யராஜ் – தமிழ் சினிமாவின் தனித்துவமான திரைக்கதை மன்னன்!

தினத்தந்தி

1. தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளரான கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73.

2. இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

3. 'சுவர் இல்லாத சித்திரங்கள்' மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ், 'முந்தானை முடிச்சு', 'அந்த 7 நாட்கள்', 'மௌன கீதங்கள்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கினார்.

4. எளிமையான கதை சொல்லல், குடும்ப நகைச்சுவை மற்றும் வலுவான திரைக்கதை அமைப்பால் தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றார்.

5. 'ஒரு கைதியின் டைரி' படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியதுடன், அதன் இந்தி ரீமேக்கான 'ஆக்ரி ராஸ்தா' திரைப்படத்தையும் இயக்கி வெற்றி கண்டார்.

6. நடிகை பிரவீணாவை முதலில் திருமணம் செய்த அவர், பின்னர் நடிகை பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு சரண்யா, சாந்தனு ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

7. திரைப்படங்களைத் தாண்டி, 'பாக்யா' வார இதழை நடத்தி வந்த அவர், இசையமைப்பாளர் மற்றும் பாடகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

8. அரசியலிலும் ஈடுபாடு கொண்ட பாக்யராஜ், அ.தி.மு.க., பின்னர் தனிக்கட்சி, அதன் பிறகு தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டார்.

9. அவரது பல திரைப்படங்கள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றன. தமிழ் சினிமாவில் அழியாத முத்திரை பதித்த பாக்யராஜின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

காதலர்களை அதிகம் ஈர்க்கும் சுற்றுலாத் தலங்கள்!