தினத்தந்தி
கோவா; இந்தியாவின் மிகச்சிறந்த கடற்கரை சுற்றுலா தலமான கோவா, அழகிய கடற்கரைகள், நீர் விளையாட்டுகள் மற்றும் துடிப்பான இரவு நேரக் கொண்டாட்டங்களுக்குப் பெயர் பெற்றது.
கேரளா - மலைப்பிரதேசங்கள்; வயநாடு, மூணாறு, வாகமண் போன்ற தென்னிந்தியாவின் மிகப்பிரபலமான மலைப்பிரதேசம் இங்கு உள்ளன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேலென விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள் காதலர்களைக் கட்டிப்போடும்.
மணாலி: பனிப்பொழிவையும் சாகசங்களையும் விரும்பும் காதலர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும் இடம்தான் மணாலி. எப்போதும் தவழும் மேகக்கூட்டங்கள் காதலர்களை அப்படியே வசீகரிக்கும்.
கூர்க்; இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் இங்கு, காபி தோட்டங்களுக்கு நடுவே உள்ள விடுதிகளில் தங்கி, குளிர்ந்த காலநிலையை ரசிப்பதும், நீர்வீழ்ச்சி போன்ற இடங்களுக்குச் செல்வதும் சிறந்த அனுபவமாக இருக்கும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள்; கூட்ட நெரிசலற்ற தனிமையான கடற்கரைகள், கடலுக்கு அடியில் 'ஸ்கூபா டைவிங்' செய்வது மற்றும் கடற்கரையில் நடக்கும் 'கேண்டில் லைட் டின்னர்' ஆகியவை காதலர்களை மிகவும் ஈர்க்கிறது
ஊட்டி; பனிமூட்டம், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குளிர்ந்த காலநிலை காதலர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஊட்டி ஏரி, தாவரவியல் பூங்கா, மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகியவை பிரபலமானவை.
ஆக்ரா; காதலின் உலகளாவிய சின்னமான தாஜ்மஹால் உள்ள இடம் ஆக்ரா. உலகின் அதிஅற்புதமான இந்த காதல் சின்னத்தை காதலர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்க விரும்புவார்கள்.
கேரளா - கடற்கரைகள்; அரபிக்கடலின் எல்லையில் அமைந்துள்ள கேரளாவின் கடற்கரைகள், அதன் தனித்துவமான இயற்கை அழகிற்குப் பெயர் பெற்றவை. கோவளம், வர்கலா என ஒவ்வொரு கடற்கரையும் காதலர்களுக்குப் அமைதியையும், அழகான நினைவுகளையும் தரவல்லவை.