தினத்தந்தி
தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றத்தில் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்புகள் பெறப்படுகின்றன - உள்துறை செயலர் தீரஜ்குமார்
✦ கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு வரும் 15-ஆம் தேதி ஆஜராக உள்ள நிலையில், நாளை டெல்லி செல்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்!
✦ மதுரையில் 398 சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்க பதுக்கலில் ஈடுபட்ட இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது!
✦ சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார் காளியம்மாள்!
✦ தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 16-ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
✦ "பெட்ரோல், டீசலுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3.5 கோடி லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையாகி உள்ளது!" - தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம் விளக்கம்
✦ "எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை. மக்கள் அச்சத்தில் அதிகமாக பெட்ரோல், டீசலை வாங்க வேண்டாம்!" - இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்
✦ சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும், ஒரு கிராம் 14,900-க்கும் விற்பனை!
✦ சசிகலா தொடங்கிய கட்சிக்கு 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என பெயர்; சட்டமன்றத் தேர்தலில் 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு!