அடுக்குமாடி வீடுகளில் கடைபிடிக்க வேண்டிய வாஸ்து நெறிமுறைகள்!

தினத்தந்தி

அடுக்குமாடி வீடுகள் கட்டும்போது வாஸ்து விதிகளை பின்பற்றுவது பலரால் முக்கியமாக கருதப்படுகிறது. அதன்படி, கட்டிடம் அமைக்கப்படும் நிலம் சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருப்பது சிறந்ததாக கூறப்படுகிறது.

கட்டிடம் கட்டப்படும் இடத்தின் தெற்கு அல்லது வடக்கு பகுதியில் குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் இல்லாமல் இருப்பது நல்லதாக கருதப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் பிரதான வாசல் அமைப்பதை தவிர்க்கலாம். இருப்பினும், சிலரின் ஜாதக அமைப்புகளுக்கு ஏற்ப விதிவிலக்குகள் இருக்கலாம்.

கட்டிடத்தின் மையப் பகுதியில் திறந்தவெளி அமைப்பது சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் கிடைக்க உதவி செய்து, ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.

சிகப்பு, கருப்பு மற்றும் வெளிர் நீல நிறங்களில் முழுக் கட்டிடத்தையும் வர்ணம் பூசுவதை தவிர்க்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கட்டிடத்தின் வாசல்கள் மற்றும் ஜன்னல்களின் மொத்த எண்ணிக்கை ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருப்பது நல்லதாக கருதப்படுகிறது.

குடியிருப்பின் பால்கனி கிழக்கு அல்லது வடக்கு திசையில் அமைந்திருந்தால் அதிக வெளிச்சமும் காற்றோட்டமும் கிடைக்கும்.

வடகிழக்கு திசையில் படிக்கட்டு அமைப்பதை தவிர்ப்பது வாஸ்து விதிகளின்படி சிறந்ததாக கருதப்படுகிறது.

எலும்புகளை வலுப்படுத்தும் பலாப்பழம்... தினமும் சாப்பிடலாமா?