தினத்தந்தி
தேவையான பொருட்கள்: மைதா – ½ கிலோ, சீனி – 3 கப், முந்திரி – 25, ஏலக்காய்த்தூள் – 3 சிட்டிகை, கேசரி பவுடர் – ¼ தேக்கரண்டி, சோடா உப்பு – 1 சிட்டிகை, உப்பு – ½ தேக்கரண்டி, எண்ணெய் – 2 கப், நெய் – தேவையான அளவு.
செய்முறை: 1. முதலில் மைதா மாவைச் சலித்து எடுத்துக்கொள்ளவும். முந்திரியைச் சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
2. ஒரு கப் தண்ணீரில் கேசரி பவுடரைக் கலந்து வைக்கவும். சலித்த மைதா மாவுடன் இந்தத் தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். மாவு கையில் ஒட்டாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் தடவிக்கொள்ளலாம்.
3. பிசைந்த மாவிலிருந்து எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து, சப்பாத்தி போல் வட்டமாகத் தேய்க்கவும். பின்னர் அதைச் சுருட்டி மூன்று துண்டுகளாக நறுக்கவும்.
4. நறுக்கிய துண்டுகளைத் தனித்தனியாக எடுத்து, சிறிய வட்டமான பூரிகளாகத் தேய்த்து வைத்துக்கொள்ளவும்.
5. ஒரு பாத்திரத்தில் சீனியுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்துக் கலக்கவும்.
6. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தேய்த்து வைத்த பூரிகளைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு, சிவக்காமல் எடுத்துவிடவும்.